Show all

உங்கள் வங்கி கணக்கில் உள்ள முழுப்பணமும் திருடப்படலாம்! எச்சரிக்கையாக இருங்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் போட வந்த ஊழியர்கள் ஸ்கிம்மர் கருவி பொருத்தி உள்ளதை கண்டு பிடித்தனர். உடனடியாக இது பற்றி தி.நகர் வங்கி மேலளாளர் மகேஷிடம் தகவல் அளிக்க அவர் குறிப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

மர்ம நபர் ஏடிஎம்-ல் பொருத்திய ஸ்கிம்மர் கருவியை எடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். குமரன் நகர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஏடிஎம்-க்கு சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஏடிஎம்களில் இது போன்று ஸ்கிம்மர் கருவி மூலம் திருடும் கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டத் துவங்கியுள்ளது. துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வாடிக்கையாளர்கள் பணம் பறிபோக வாய்ப்புள்ளது.

ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது தரவுகளை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் அட்டையை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏடிஎம் அட்டையை நுழைக்கும்போது நொடியில் உங்கள் தரவை அந்த ஸ்கிம்மர் கருவி திருடி விடும். உங்கள் கணக்கில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏடிஎம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.

நீங்கள் சென்றவுடன் பணம் எடுக்க வருவது போல் அந்த நபர் ஸ்கிம்மர் கருவியை எடுத்து ஒரு மணி நேரத்தில் உங்கள் தரவுடன்; கூடிய அட்டையை தயாரித்து உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் குறியீட்டு எண்ணைக் கவனிக்க வைஃபை வசதியுடன் கூடிய படக்கருவியையும் பொருத்தியிருப்பார்கள்.

இதற்கு எச்சரிக்கையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏடிஎம் அட்டையை நுழைக்கும் இடத்தில் வேறுபாடாக உணர்ந்தீர்கள் என்றால் கவனமாக சோதித்த பின்னரே பணம் எடுக்க அட்டையை நுழைக்க வேண்டும்.

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.