Show all

காவல்துறைக்கு, அறங்கூற்றுமன்றம் ஆணை! எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு புதனுக்குள் உட்படுத்த

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் பரபரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.

எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருப்பதாக, அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மனநலனில் பாதிப்பு இருக்கலாம் அதனால் மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மனு பதிகை செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு அனுப்புவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றது. அவருக்கு மனநலனில் பிரச்சனை இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்று கூறி இருந்தார்கள்.

இந்த நிலையில் எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று அம்பத்தூர் காவல்துறையினரிடம் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துவதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

இதில் அம்பத்தூர் காவல் துறையினர் விளக்கமளிக்க சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் புதன் கிழமை வரை அவகாசம் அளித்து வழக்கை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் ஒத்திவைத்தது.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.