Show all

தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது

 

 

     தமிழகத்தில் பாரம்பரிய சல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.

      அமெரிக்க பீட்டா அமைப்பின் நாட்டுமாடுகள் ஒழிப்பு தகிடு தத்தத்திற்கு பலிகடாவாகி-

தமிழகத்தின் பாரம்பரிய சல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

     நடுவண் பாஜக அரசும் தமிழக அரசும் பீட்டா அமைப்பின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் சல்லிக்கட்டு விசயத்தில் வழக்கமான அரசியலையே இரண்டு ஆண்டுகளாக பின்பற்றினர்.

     தமிழக மாணவர்களால் முன்னெடுக்கப் பட்ட சல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவான போராட்டம்  தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

     சல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் என்று இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, காஞ்சீபுரம் உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.      அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.

     பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

     சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதிலும், அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்பதிலும் மக்கள் தீவிரமாக உள்ளனர். தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

     சல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கவேண்டும் என்ற போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     செல்பேசி விளக்கொளியிலும், மெழுவர்த்தி ஏந்தியும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.