Show all

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1கோடி கையெழுத்துகளை...

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1 கோடி கையெழுத்துகளை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வழங்கினார்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் நேற்று நேரில் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்,

மதுவிலக்கு கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமாகா நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். மொத்தம் பெறப்பட்ட 1 கோடியே 1 லட்சத்து 9 ஆயிரம் கையெழுத்துகளையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தமாகா-வின் கொள்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். முதல் கட்டமாக ரயில், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் உள்ள மது அருந்தும் கூடங்களை உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.