Show all

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜுன் 1ம் தேதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜுன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வழக்கு விசாரணை முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

 

குமாரசாமி தீர்ப்பு பற்றி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்சநீதிமன்றத்தில் இன்று வாதிட்டார்.

 

இதன்போது, ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் குளறுபடி இருப்பதாக ஆச்சார்யா வாதிட்டார்.

 

கர்நாடக நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை இரத்து செய்ய வேண்டும் என்றும் ஆச்சார்யா வாதிட்டார்.

 

ஜுன் 1ம் தேதி மேலும் ஒரு மணி நேரம் ஆச்சார்யா வாதத்தை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

மேலும் ஜுன் 1ம் தேதி அனைத்து தரப்பு வாதத்தையும் முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

 

கோடை விடுமுறையாக இருந்தாலும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.