Show all

தமிழில் தன்னுடைய பேச்சை தொடங்கி, தாய்மொழியைப் போற்றிட தமிழ் இளைஞர்களை அறிவுறுத்திய, குடியரசு துணை தலைவர்

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, கலந்து கொண்டார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், விழாவில் தன்னுடைய பேச்சைத் தமிழில் தொடங்கிய காணொளி, இணையத்தளத்தில் தமிழ் மக்களின் அன்பான விருப்பங்களை குவித்து வருகிறது. 

தமிழில் தன்னுடைய பேச்சைத் தொடங்கி வெங்கையா நாயுடு,  தாய் மொழிதான், நம்மை உயர்த்தும் என்றும், தாய்மொழி, தாய் நாடு, பிறந்த ஊர் உள்ளிட்டவற்றை என்றென்றும் மறக்கக்கூடாது எனவும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மேற்கத்திய கலாச்சார மோகத்தால், நமது நாட்டு வரலாற்றை மறந்து வருவதாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்றோரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். 
  
இங்குள்ள நல்ல விசயங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சார மோகத்தின் விளைவாக, வெளிநாட்டில் இருப்பவை மட்டும் தான் சிறந்தவை என நினைக்கிறோம். அது உண்மையல்ல. ராபர்ட் கிளைவ் தான் சிறந்தவர் என வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. நம்மை ஏமாற்றிய ஒருவரை சிறந்தவர் என அழைக்கிறோம். வீரபண்டிய கட்ட பொம்மன், முத்துராமலிங்க தேவர், வ.உ. சிதம்பரம், பாரதியார் சத்தியமூர்த்தி, போன்றோரை நாம் மறந்து விட்டோம்
என்று பேசி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரின் ஒரு மித்த அன்பில் திளைத்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.