Show all

ஓகக்கலையில் அமெரிக்கப் பெண்ணை விஞ்சிய தமிழ்ப்பெண்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஓகக்கலையில் செய்த சாதனையை விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முறியடித்து இருக்கிறார். ஹர்ஷ நிவேதா என்ற அந்த பள்ளி மாணவி 90 வினாடிகளில் மலர்நீட்டஇருக்கை என்ற ஓகஇருக்கையைச் செய்து சாதனை படைத்து உள்ளார்.

மலர்நீட்டஇருக்கை என்ற ஓகஇருக்கை செய்வது மிகவும் கடினமானது. இதை செய்வதற்கு 3 நிமிடத்திற்கும் அதிகமாக நேரம் ஆகும்.

ஆனால் இதை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 170 வினாடிகளில் செய்து சாதனை படைத்து இருந்தார். இந்தச் சாதனை யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது.

தற்போது அந்த கடினமான மலர்நீட்டஇருக்கையை 90 வினாடிகளில் செய்து அமெரிக்க பெண்ணின் சாதனையை முறியடித்துள்ளார் ஹர்ஷ நிவேதா. இவர் விழுப்புரத்தில் உள்ள பிஎஸ்சிதம்பர நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்தச் சாதனையின் மூலம் ஹர்ஷ நிவேதா ஆசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,639

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.