Show all

இத்தாலியில் நடந்து முடிந்தது விராட் மற்றும் அனுஷ்கா காதல் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம், இத்தாலி நாட்டின் தென் பகுதியான டஸ்கனியில் உள்ள  பார்கோ பினாச்சிட்டோ எனும் ஹோட்டலில் நடைபெற்றது. பஞ்சாபி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  

விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  வரும் 21ம் தேதி புது டெல்லியிலும் மற்றும்  26ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து கொண்டிருந்த காலங்களில் இருவருக்கும் பிரேக் ஆப் ஆனதாகவும் கூட சில வதந்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட் நடிகையும் திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே ஹர்பஜன் சிங்-கீதா பஸ்ரா, யுவராஜ் சிங்-ஹசல் கீச், ஜாகிர்கான்-சகாரியா காட்ஜ்  போன்றோர் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.