Show all

தமிழகம் முழுவதும் மோடிஅரசுக்கு எதிரான- திமுகவின் கறுப்புநாள் போராட்டம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக, தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்பு நாளாக அனுசரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்நாளை கறுப்பு நாளாக கடைபிடிக்கின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இதேபோல் திருச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துரைமுருகன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மோடி சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் என குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.