Show all

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கருத்து ஏற்புடையதல்ல: வைகோ

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதனின் கருத்து ஏற்புடையதல்ல; அவரது பேச்சு பல நீதியரசர்களின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.

     சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மறைந்த முதல்வர் செயலலிதா மரணத்தில் ஐயப்பாடு இருக்கிறது என்றும் தேவைப்பட்டால் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்கவும் உத்தரவிடுவேன் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை, தமிழக அரசு, நடுவண் அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார்.

     அப்படியெனில், அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரீச்சர்ட் பீல் என அனைவரும் உண்மையை மூடி மறைத்தார்களா?

உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்க உத்தரவிடுவேன் என நீதியரசர் கூறியிருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீதியரசர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அவர் தனது எல்லையைத் தாண்டி பேசியிருக்கிறார். இவருடைய கருத்து பல நீதியரசர்களின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. இவருடையச் செயலுக்காக வருந்துகிறேன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.