Show all

தமிழர்பெருமிதம்! 33நாடுகள் அங்கம் வகிக்கும், மயக்கவியல் அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த பாலவெங்கட சுப்பிரமணியம் தேர்வு

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா, என்னும் அமைப்பின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் பாலவெங்கட் சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா, எனும் அமைப்பு சர்வதேச அளவில் பாதுகாப்பான மயக்கவியல் மருத்துவ நடைமுறைகள் குறித்து புதுப்பித்து வருகிறது. 

ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், மங்கோலியா உள்ளிட்ட 33 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் பாலவெங்கட் சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா அமைப்பின் தலைவராக இந்தியாவிலிருந்து இதுவரை யாரும் பொறுப்பேற்றிருக்க வில்லை முதலாவதாக ஒரு தமிழர் தேர்வாகியிருக்கிறார் என்பது தமிழர்களுக்கான பெருமிதம். 

இந்தியா தேர்வு செய்யும் நீட்டில் தமிழனுக்கு இடம் இல்லை. ஆனால் உலகம் செய்யும் எந்தத்; தேர்விலும், இந்தியாவில் தமிழனே முன்னனியில் அடிக்கடி வருகிறான் என்ற கேள்வியும், ஓ! அப்படியானால் இந்தியாவின் தேர்வு தரம் சார்ந்ததல்ல ;  தராதரம் சார்ந்ததோ என்று புரிந்து கொள்வதற்கானதாகி விடுகிறது.

கோவை கங்கா மருத்துவமனையின் மயக்கவியல் துறை மூத்த ஆலோசகராக இருக்கும் பாலவெங்கட் சுப்பிரமணியம் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்கன் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியன்ஸ் என்ற அமைப்பு நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் செயல்படுகிறது. என்று தெரிவித்தார்.

குத்து மதிப்பாக மயக்க ஊசி செலுத்தும் முறை மாறி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் மூலம் குறிப்பிட்ட வலிக்கான நரம்பைக் கண்டுபிடித்து அப்பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் மயக்க ஊசியை போடும் முறையை கண்டறிந்து அதன் வழி சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தேன். அதற்காக பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்N;ப, கங்கா மருத்துவமனையில் ஒரு மையத்தை ஏற்படுத்தினோம். இம்முறையை நாட்டில் உள்ள மயக்க மருத்துவர்கள் பலரும் இங்கே வந்து பயிற்சி எடுத்து சென்றனர் 

இந்நிலையில்தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அகடாமி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா ஆப் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கினோம். என்னைத் தலைவராக கொண்டு 5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது 1480 உறுப்பினர்கள் உள்ளனர். 

தற்போது இந்திய அளவில் சொசைட்டியில் பதிவு செய்யப்பட்ட மயக்கவியல் மருத்துவர்கள் மட்டும் 28 ஆயிரம் பேர் உள்ளனர். உலக அளவில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் மயக்கவியல் மருத்துவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இவ்வாறு மயக்கவியல் நிபுணர் பாலவெங்கட் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.