Show all

முதல் பட்டியலில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை

நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

எனினும், இந்த முதல் பட்டியலில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.

தமிழகச் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டணி, தமாகா சார்பில் தேமுதிகவிற்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேமுதிக சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

 

இதன்படி ஓமலூரில் ஏ.ஆர்.இளங்கோவனும், புதுக்கோட்டையில் என்.ஜாகிர் உசேனும், திருச்சி மேற்கில் ஆ.ஜோசப் ஜெரால்டும், கன்னியாகுமரியில் தா.ஆதிலிங்கபெருமாளும், பத்மநாபுரத்தில் டி.ஜெகநாதனும் போட்டியிடுகின்றனர்.

 

இவர்களுக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகிய கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு கழக வேட்பாளர்களைப் பொதுமக்களின் பேராதரவைத் திரட்டி வெற்றிபெறச்செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் விஜயகாந்த்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.