Show all

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை  மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட 280  இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்,  விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவக்கி  உள்ளது.

நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50ம்,  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30ம், விண்ணப்பங்களில்  மாறுதல் செய்ய ரூ. 5ம்,  விண்ணப்பங்களில் மாறுதல்  செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20ம்,  சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த  வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணமான ரூ.50ம் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை இம்மையங்களில் செலுத்தும் வசதி  செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.  எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.