Show all

சிக்கிட்டான் ! செதச்சுருவாங்க ! - ஸ்வாதியை கொன்ற மர்ம மனிதன் கைது

கடந்த 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பொறியாளர் கொடூர முறையில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.முதலில் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த கொலை வழக்கு பிறகு சென்னை பெருநகர போலீஸ் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டு 8 தனிப்படைகள் அமைத்து கடந்த ஒரு வாரமாக கொலையாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மீனாட்சிபுரம் எனும் கிராமத்தில் ராம்குமார் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார் வருவதை கண்ட ராம்குமார் தான் கையில் வைத்திருந்த பிளேடு மூலம் தான் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான்.இதனையடுத்து , பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.பிறகு , பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் . போலீசார் அவருக்கு நினைவு திரும்பியவுடன் விசாரிக்க ஆயத்த நிலையில் உள்ளனர்.

கொலையாளி சிக்கியது எப்படி ?

கொலை நடந்த நாள் முதலே போலீசார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஒட்டிய பகுதிகளில் வீடு வீடாக  சி.சி.டிவி யில் சிக்கிய புகைப்படத்தை வைத்து  விசாரித்துள்ளனர்.அப்போது சூளைமேடு பகுதியில் 8 வது சவுராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எம் மேன்ஷனில் விசாரித்த போது அங்கு வேலைசெய்யும் ஒருவர் இந்த புகைப்படத்தில் இருப்பவர் மாதிரியே ஒருவர் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் அவர்அ நெல்லையை சேர்ந்தவர் எனவும்  25 ஆம் தேதியிலிருந்து அவரை பார்க்கவில்லை  எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை போலீசார் தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதலில் கொலையாளியின் நடவடிக்கையை கண்காணிக்க நினைத்த போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் கொலையாளியை கண்காணித்தனர் பிறகு நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.

கொலையாளியைப்பற்றி அக்கிராமத்தினரிடம் விசாரித்த போது, அவர் பரமசிவன் என்பவரின் மகன் எனவும் ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து முடிந்ததாகவும் வேலை சம்மந்தமாக 3 மாதங்களுக்கு முன் சென்னை சென்றதாகவும் கூறியுள்ளனர். அவரின் குணாதிசயங்களை பற்றி விசாரித்த போது அவன் மிகவும் அமைதியான பையன் எனவும் அதிகம் யாரிடமும் பேசமாட்டான் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் , இந்தக்கொலையில் ராம்குமாருடன் தங்கியிருந்த நண்பர் இந்த கொலைக்கு உதவியாதாவதும் , அந்த நபரை தேடி வருவதாகவும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.