Show all

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேட்டை நடுவண் புலனாய்வுத் துறை விசாரிக்கனுமாம் ஸ்டாலினுக்கு

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலப் பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்கு மாற்றப் பட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதனால் தமிழகத்திற்கு நடுவண் அரசு நீட் தேர்வு நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் உயிர்பலியெல்லாம் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அணி-1 தேர்வில் முறைகேடுகள் குறித்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஊழல் செய்கிறது எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டால் சரி. அதென்ன நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரிப்பது? 

மாநில அரசிடம் இருக்கும் ஒவ்வொரு உரிமையும் மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும் அத்து மீறல் நடக்கிறது என்றால் அதைக் களைவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து நடுவண் அரசு வந்து கவனிக்க வேண்டும் என்று ஒவ்வொரு துறையாக விட்டுக் கொடுத்தால் தமிழ்நாடு அரசு இருக்காது; நடுவண் அரசுக்கு கட்டுப் பட்ட மாநிலப் பஞ்சாயத்துதான் இருக்கும்;.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.