Show all

தப்பினார் ஸ்டாலின்! நல்ல அடிமை நமக்குச் சிக்கினார் என்று, ஊடகங்கள் முயன்ற குதிரையேற்றத்திலிருந்து

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையைப் பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும், ஆதரவு தெரிவிப்பது போலவும் மிகப்பெரிய கருத்துப் பரப்புதலைத் தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட நாடு உருவாக வேண்டும் என்று தான் குரல் கொடுக்கவில்லை என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுத் திடலை பார்வையிட்ட பின்னர் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தென்மாநிலத்தில் திராவிடநாடு கோரிக்கை வலுப்பெற்று வரும் சூழல் நிலவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் வந்தால் வரவேற்பேன், வரும் என்ற நம்பிக்கையில் தான் நானும் இருக்கிறேன் என்று தெரிவித்ததாகவும் கருத்து பரவி வந்நது. 

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மு.க.ஸ்டாலின் திராவிட நாடு வந்தால் வரவேற்பேன் என்று கூறியதாக வெளிவந்த செய்தியால், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன ஊடகங்கள். திமுகவால் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை மீண்டும் உயிர்பெற்று வருகிறது என்று, ‘அன்று ராஜிவ் கொலையை திமுக மீது சுமத்தி பலரும் அரசியல் ஆதாயம் தேட முயன்றது போல’ ஸ்டாலின் மீது பிரிவினை வாதத்தை திணிக்கும் முயற்சியில் இரண்டு நாட்களாக ஊடகம் மற்றும் பல்வேறு தரப்பிலும் கடுமையாக முயன்றார்கள். நல்லவேளை தனக்கு உள்ளடி வேலைகள் நடக்கின்றன என்று புரிந்து கொண்டார் ஸ்டாலின்; மறுப்பை வெளியிட்டு, தப்பித்தார் ஸ்டாலின்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,729

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.