Show all

சேப்பாக்கம் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளோடு பாம்புகளும் களமாடலாம்! வேல்முருகன் எச்சரிப்பு

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முயலாமல்- போரட்டத்தை திசை திருப்ப சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதே சரி என்று அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளைப் பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து அரங்;கமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை தொலைக்காட்சியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக கூறிவிட்டார். வீரர்களும், ரசிகர்களும் கருப்பு அடையாளம் அணிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

ரசிகர்களோடு ரசிகர்களாக சென்று ஐபிஎல் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். ஆனால் தமிழக கிரிக்கெட் சங்கமோ அரங்கத்திற்குள் கொடி, அடையாள அட்டை, பதாகை உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதனிடையே அரங்கத்தைச் சுற்றி 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கான கண்டனத்தை உலமறிய தெரிவித்திட ஐபிஎல் போட்டியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் வேல்முருகன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். 

இந்நிலையில், தன்னார்வமாக ஐபிஎல் போட்டியை தடை படுத்த பாம்புகளை அனுப்பவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்ச்ரித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,753.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.