Show all

சரி அபராதம் வாங்கியாச்சு, நீர்நிலைகளைப் பேணுவது எப்படி! நீர் நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதமாம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் நேரில் அணியமாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையின் பக்கிங்காம் கால்வாய் உட்பட நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கின் மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று வெளியிட்ட உத்தரவில், கூவம், அடையாறு, பக்கிங்காம் உள்ளிட்ட கால்வாய்களை தூர்வாரி பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட பொதுப்பணித்துறை காரணமாகிவிட்டது. 

இதனால் ரூ.100 கோடி அபராதத் தொகையை நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அதே நேரம் வருகின்ற சனிக்கிழமை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தில் நேரில் அணியமாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறு சீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்தது. 

வழக்கு போட்டாச்சு ; சரி மக்கள் வரிப்பணத்திலிருந்து அபராதம் வாங்கியாச்சு, நீர்நிலைகளை பேணுவது யார்? எப்போது? எப்படி? நல்ல நாடு, நல்ல ஆட்சியாளர்கள், நல்ல அதிகாரிகள், ஆணையங்கள், நல்ல தீர்ப்பு, எப்போது விளங்கப் போகிறது நாடு என்று மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,066.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.