Show all

டிராபிக் ராமசாமி மீது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

உலக மகளிர் நாளில் சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் டிராபிக் ராமசாமி, பெண்களின் வழிபாட்டு உரிமையை கொச்சைப் படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் செவ்வாடை பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

     டிராபிக் ராமசாமி மீது ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     பக்தர்களை இழிவாக கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     செவ்வாடை பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த புகார் மனுவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குருவையும், செவ்வாடை அணிந்து வருகிற பெண்களையும், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் டிராபிக் இராமசாமி, தரக்குறைவாகப் பேசி கொச்சைப்படுத்தி வருகிறார்.

     இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. டிராபிக் இராமசாமியின் செயல் உண்மையமான ஆன்மீகவாதிகளையும், செவ்வாடை பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

     மேலும், இந்தப் புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி, பக்தர்களை அவதூறாகப் பேசி வரும் டிராபிக் இராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செவ்வாடை பக்தர்களின் மனது புண்படும்படியும், பெண்களை கேவலமாகவும் சமூக வலைதளங்களில் டிராபிக் ராமசாமி பேசியுள்ளதால், அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

     மதுரையிலும் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பக்தர்களாக உள்ளனர். பங்காரு அடிகளாரை ஞானகுருவாக வழிபட்டு வருகின்றனர்.

     இந்நிலையின் அக்கோயிலின் பக்தர்களாகிய எங்களையும், பங்காரு அடிகளாரையும் கேவலமாகப் பேசி அவையனைத்தும் வலையெளியிலும் வெளியாகியுள்ளன.

     மேலும் மேல்வருத்தூர் ஆதிபராசக்தி கோவிலையும் அங்குள்ள தொடர்வண்டி நிலையத்தையும் மூடிவிடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை இழிவாகப் பேசும் டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     செவ்வாடை அணிந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

     இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆணையர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.