Show all

பீட்டாவுக்கு பயந்த ரஜினி

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினி மாவட்ட வாரியாக விடுபட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகிறார். மதுரை மாவட்ட ரசிகர்கள் சந்திப்பின் போது, நீண்ட தூரம் பயணித்து வந்திருந்தாலும் ரசிகர்கள் முகத்தில் சோகம் இல்லை உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார் ரஜினி.

      மேலும் மதுரை ரசிகர்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவிற்கு மட்டுமே அனுமதியுண்டு. எனவே வேறொரு தருணத்தில் பார்க்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார்.

      இந்நிலையில் மதுரை ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் ஞாயிறன்று மதுரை அழகர் கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விசயத்தை மோப்பம் பிடித்த பீட்டா அமைப்பு,

      இது தொடர்பாக நடிகர் ரஜினிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோவிலில் கிடா வெட்டு நடத்தக் கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று பீட்டா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது. ஆடு, மாடு, எருது உள்ளிட்ட விலங்குகளை கொல்பவர்களுக்கு சிறைத்தண்டனை முதல் அதிகபட்ச அபராதம் வரை விதிக்கப்பட சட்டத்தில் வாய்ப்பு இருப்பதாகவும் பீட்டா அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ரஜினியின் போயஸ் இல்ல முகவரிக்கு பீட்டாவின் இந்த மிரட்டல் ரீதியிலான கடிதம் வந்துள்ளது.

      இதனையடுத்து அழகர் கோவிலில் கிடா விருந்து கிடையாது என்று மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர். கிடா விருந்து மட்டுமே கிடையாது ஆனால் விருந்து உண்டு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

      பீட்டா ரஜினிக்கு எழுதிய கடிதத்தையடுத்து ரசிகர்கள் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

      பீட்டாவுக்கே புறமுதுகு காட்டும் ரஜினி, போர் வந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற ஓடி விட மாட்டாரா! என்ற நையாண்டி வலைதளத்தில் உலா வருகிறது.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,658

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.