Show all

ஆப்பிள் போன் வைத்திருப்போர்களை வச்சுசெய்ய காத்திருக்கும் வைரஸ்கள் ! உஷார்

இப்போல்லாம் ஆப்பிள் போன் வச்சிருந்தாலே கெத்துனு ஆயுபோச்சு ! ஆனா இப்போ ஆப்பிள் போனோட நிலைமை என்ன தெரியுமா ?

கூகிளின் அல்பாபெட் இன்க்(Alphabet Inc Google) மற்றும் இதர பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்கள் ஆப்பிள் போனை சோதனை செய்த போது,MAC மற்றும் iOS கொண்ட ஆப்பிள் செல்போன் மற்றும் கணினிகள் மெல்ட்டௌன் (Meltdown) மற்றும் ஸ்பெக்ட்ரே (Spectre) என்ற சிப்(chip) தொடர்பான குறைபாடு உள்ளதாகவும் ,இதனால் வைரஸ் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்டெல் சிப் மட்டுமே அனைத்து ஸ்மார்ட்போன் மற்றும் கணினி நிறுவனங்களுக்கு 'சிப்' வழங்கி வருகிறது. ஆப்பிள் மட்டுமல்லாது ,இந்த இரண்டு குறைபாடுகள் மொபைல், கம்ப்யூட்டர்,டேப்லெட் என 'இன்டெல் சிப்' உபயோகப்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆக, இன்டெல் மட்டுமல்லாது மைசரோசாப்ட், லினக்ஸ் மற்றும் அனைத்து ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் இந்த குறைப்பாட்டை சரி செய்ய அப்டேட் அல்லது பேட்ச் வெளியிட உள்ளது.

இந்த குறைபாடுள்ளதால் நீங்கள் என்ன தான் ஏன்டிவைரஸ் , பயர்வால் வைத்திருந்தாலும் இணையத்தின் வாயிலாக உங்கள் ஸ்மார்ட் போனை ஹேக் செய்ய முடியும்.

இந்த குறைபாடுகள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் மட்டும் கிடையாது . மொபைல் மற்றும் கணினிகளில் மட்டுமே இருப்பதாகவும் இதனை ஓரிரு நாளில் சரி இதற்குன்டானா பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வந்து விடுவோம் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.