Show all

தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்! ஆய்வாளர் ஒரிசா பாலு பதிவேற்றிய நிறைய காணொளிகள் வலையொளியில்

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி அவர்கள் தமிழக ஆய்வாளர். வலையொளியில் காணப்படும் இவரது காணொளிகள் தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றவை. 
 
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வருபவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.

இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வு கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வருபவர். கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார்

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருகிறார். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,242.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.