Show all

கமலின் அரசியல் கருத்துக்களைத் திறானாய்வு செய்வதில் தடுமாறும் பொன்.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

     கமலின் கீச்சுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். எச். ராஜா, ஒருமையில் பேசியதோடு முதுகெலும்பில்லாதவர் கமல் என்றெல்லாம் கூறி வசைபாடினார்.

அதற்கு எலும்பு மருத்துவரா எச். ராஜா என்று பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன்.

     இதனிடையே கமலின் அரசியல் கருத்து குறித்து மதுரை வந்த நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனக்கு காலஅவகாசம் தேவை என்றார்.

     எதற்கு கால அவகாசம்? உண்மையிலேயே கமலின் கருத்தைப் புரிந்து கொள்ளவா? இல்லை மேலிட அனுமதிக்கா என்கிற நையாண்டி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

     மேலும் வரும் 27அன்று அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் காலஅவகாசத்திற்கான ஒரு குளுவையும் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.