பல அதிர்ச்சி தகவல்கள்
இடம்பெற்றுள்ள, இந்தியத் தொடர்வண்டித் துறையால் வழங்கப்பட்டு வரும் உணவுச் சேவை குறித்த
அறிக்கையைக் கணக்கீடு மற்றும்
கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு, சூலை21 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
இந்த அறிக்கையில், தொடர்வண்டி துறையால்; வழங்கப்படும்
உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவைகள் தூய்மையற்ற உணவு வகைகள், மறுசுழற்சி
உணவுப் பொருட்கள், பழைய உணவு பொருட்களை சூடேற்றி வழங்கப்படுவதாகவும், கெட்டுப் போனவையாகவும்,
உள்ளன. தொடர்வண்டி நிலையங்களில் விற்கப்படும்
குடிநீர் குடுவைகள் அங்கீகாரமற்றவை, காலாவதியானவை. உணவு சேவை நிர்வாகத்தின் நிச்சயமற்ற நிலை, தொடர்வண்டி
உணவுக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கு காரணம் என தணிக்கை பிரிவு
கண்டுள்ளது. தொடர்வண்டியில் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார
வசதிகள் பராமரிக்கப்படுவதில்லை என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர்வண்டியில் நடமாடும்
அலகுகளில் பணியாற்றும் உணவுப்பொருட்களுக்கான உணவுப்பொருட்களை நிருவாகம் வழங்குவதில்லை,
அப்படியே வழங்கப்படும் உணவு பொருள்களின் தரத்தில் பல குறைபாடுகளும் உள்ளன. கணக்கீடு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு,
அணி மற்றும் தொடர்வண்டி நிர்வாகிகள் இணைந்து 74 தொடர்வண்டி நிலையங்களிலும் 80 தொடர்வண்டிகளிலும்
நடத்திய கூட்டு ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில்- தொடர்வண்டிகள்
மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் தூய்மையாக இல்லை. குப்பை
தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, தொடர்வண்டிதுறையால் வழங்கப்படும் உணவுகள் மூடப்படுவதில்லை,
தொடர்வண்டி பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுக்கள்,
ஈக்கள் நிறைந்து உள்ளன. தூய்மை மற்றும் சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை எனவும் கணக்கீடு
மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு, தெரிவித்துள்ளது ரயில்வேயில் உணவுச் சேவைகளை வழங்குவதற்காக திட்ட
மாதிரி தயாரிக்கப்படவில்லை. தொடர்வண்டிகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கு பயணிகளுக்கு
ரசீதுகள் அல்லது நடமாடும் அலகுகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் வழங்கப்படுவதில்லை.
உணவு பொருட்கள் விவரமோ, உணவுச் சேவை மேலாளர்கள் பரிசோதிக்கப்பட்டதற்கான எந்தவொரு விவரமும்
தொடர்வண்டியில் கிடைக்கவில்லை. மேலும், தொர்வண்டி பாதைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத்
தவிர்ப்பதற்கான எந்த முன்னேற்பாடுக்கான நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.