Show all

ஸ்டெர்லைட் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொன்.ராதாகிருஷ்ணன்! பாஜக வழக்கறிஞர் பிரிவு உள்ளரங்க மாநாட்டில்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக வழக்கறிஞர் பிரிவு உள்ளரங்க மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் இதழியலாளர்களிடம்  பேசுகையில், இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சூழலைத் தடுக்கும் வகையில் சில அமைப்புகள் ஆலைக்கு எதிராகப் போராடிவருகின்றன. ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்கள், ஆலையைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதையும் நாம் பார்க்க வேண்டும், என்று தனது ஸ்டெர்லைட் ஆதரவு நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார்.

அதற்காக பதிமூன்று பொதுமக்களை காவு வாங்க வேண்டிய தேவையென்ன? ஊர் மக்களுக்கு பாதிப்பை வழங்கிய தொழிற்சாலையின் உரிமையாளரிடமும், அதற்கு அனுமதியளித்த அரசிடமும். பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் இழப்பீடு கோருவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. தங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக பொது மக்களை பாதிக்கும் தொழிற்சாலையை வேண்டும் என்று கேட்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? அதில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கும் அந்த நிறுவனம் உயிர்கொல்லிதானே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.