Show all

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிலை குறித்து அரசியல் பார்வையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடலூரில் வண்டிப்பாளையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு செய்ய சென்றார். இந்நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கீற்று மறைப்பை திறந்து பார்த்தார்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பார்த்ததும் அலறினார். இதையடுத்து அவரை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் திவாகரன் முகநூலில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பெண் குளித்துக் கொண்டிருந்த கீற்று மறைப்பை பார்வையிட்ட போது ஆளுநருடன் 18 ஆண்கள் இருந்தனர்.

என்னை பொருத்தவரை முதலில் அரசு அலுவலகங்களில் தூய்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு வீடுவீடாக செல்வதும், கழிவறைகளை ஆய்வு செய்வதையும் வைத்துக் கொள்ளலாம் என்று பதிவு செய்துள்ளார்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை முதலில் கட்டுப்படுத்தி விட்டு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்ற பொருளில் ஜெயானந்த் பதிவிட்டுள்ளார். ஆளுநரின் நிலை குறித்து அரசியல் பார்வையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்களை வறுமையிலிருந்து போக்காமல்;... மோடியின் நடவடிக்கைக்கு கட்சிக்காரர்கள், செம்மறியாட்டுக் கூட்டம்போல, மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடந்து கொள்வது அருவருப்பாய் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,637

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.