Show all

மக்கள் உயிர் பறிக்கும் அரசு கட்டிடங்கள்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து நாகை பொறையாரில் அரசு கட்டிட மேற்கூரை இடிந்து உயிர் பலி எடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சோமனூர் அரசு பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆட்சிப்பணித் துறை அதிகாரி சுகன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் சோமனூரில் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் போது கோவை நீலாம்பூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோரே அப்பள்ளிக்கு இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் கோவை மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்தான் நாகை பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

அரசு கட்டிடங்கள் உயிரை பறிக்கும் எமனாக மாறியிருக்கின்றன. ஆகையால் போர்க்கால அடிப்படையில் அரசு கட்டிடங்களைச் சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் முதன்மை கடமை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.