Show all

நாமக்கல் கவிஞரின் 129-ஆவது பிறந்த நாள் விழா

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உள்ளிட்டோர் பங்கேற்று கவிஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். கவிஞரின் புகழைப் போற்றும் வகையில் அவர் எழுதிய காந்தியப் பாடல்கள், சுதந்திர வேட்கைப் பாடல்களை இளைஞர்கள் பாடினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது:

தமிழக அரசின் சார்பில் நாமக்கல்லில் கவிஞருக்கு மணி மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக அரசின் தலைமை செயலகக் கட்டடம் ஒன்றுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயர் சூட்டியும், நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி என்று பெயர் சூட்டியும் அழகு பார்த்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நாமக்கல்லில் உள்ள கவிஞரின் இல்லத்தை தமிழக அரசின் அரசுடைமையாக்கி உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர்.

நாமக்கல்லில் தமிழக அரசின் சார்பில் நாமக்கல் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.