Show all

சட்டமன்றத்தில் முன்னால் முதல்வர் படத்தை திறக்க கூடாதாம். சொல்கிறார் ஸ்டாலின்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத்தில் முன்னால் முதல்வர் படத்தை திறக்கக் கூடாது என்று பெரிய அறிக்கை விட்டுள்ளார் ஸ்டாலின்

மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்திற்கு அதிகமாக பலமடங்கு சொத்துகுவித்த ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்சஅறங்கூற்று மன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவின் உருவப்படத்தை, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பாகத் திகழும் சட்டமன்றத்தில், பேரவைத் தலைவர் திறந்து வைப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்பது ஸ்டாலின் அறிக்கையின் சாரம்.

மக்கள் வழங்கிய ஆட்சியைப் பறிப்பதற்கும், கொடுங்கோலாட்சியைத் தண்டிப்பதற்கும், ஆட்சியை வழங்கிய மக்களுக்கே உரிமை உண்டு என்று சட்டத்தை வடிவமைக்க வேண்டிய இடத்தில் இருந்து,

முன்னால் முதல்வருக்கான இடத்தைப் பெற்றுத்தர வேண்டியது அதே பொறுப்புக்காக, மக்கள் மன்றத்தில் நிற்கிற ஸ்டாலின் கடமையேயொழிய இப்படி பேசுவது அவருக்கு அந்த இடத்திற்கு வருவதற்கான தகுதி இழப்பாகவே மக்கள் கருதுவார்கள் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

நடுவண் அரசில் ஆண்டவர்களுக்கு எல்லாம் இப்படி சோதனை வருவதில்லை. திமுகவும், அதிமுகவும் ஒருவர் மீது ஒருவர் ஆட்சியை பிடிப்பதற்காக, வாரியிறைத்துக் கொள்ளும் சேற்றடிகள் தாம் இந்த வாதங்களும் வழக்குகளும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு ஆண்ட முதல்வரின் படம் ஆண்ட முதல்வர்களின் வரிசையில் இடம் பெறுவதுதான் வரலாறு.

மக்கள் வழங்கிய முதல்வர் பதவியை கண்ணியப் படுத்துங்கள்; எந்த அடிப்படையிலும் களங்கப் படுத்துவது மக்களுக்கான மரியாதையாக இருக்க முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.