Show all

தமிழர் திருவிழா நாளில், பாஜகவின் அடாவடி ஆதிக்க அழைப்பு! பள்ளிக்கு வரவேண்டுமாம் மாணவர்கள்- மோடி நிகழ்ச்சிக்காக

மக்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும் ஆதிக்கவாத அரசாக பாஜக இந்திய அரசு தொடர்ந்த செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்குசேவை வரி என்று மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்த பாஜக அரசு தற்போது தமிழக மாணவர்களை நோக்கி அந்த அடாவடியை திருப்பியிருக்கிறது பாஜக அரசு. 

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரவிருக்கும் பொங்கல் விழாவின் மூன்றாம் நாள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், விரும்பினால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் மாற்று விளக்கம் அளித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர்தம் பொங்கல் கொண்டாட்ட நாளில் (விடுமுறையில்) தலைமை அமைச்சர் மோடியின் ஹிந்தியில் தலைப்பிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் டெல்லியில் கலந்துரையாடும், ஹிந்தியில் தலைப்பிடப்பட்ட அந்த நிகழ்ச்சியை- பொதிகை தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வலையொளிப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதனைத் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

பொங்கல் விடுமுறை நாளில் இந்த நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் குழப்பம் ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு பொங்கல் திருவிழாவிற்காகச் செல்வார்கள் என்பதால், அந்த மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலையும் இருந்தது. இது தமிழக மக்களிடையே மிகக்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஒரு மாற்று விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அன்றைய நாளில் மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. மாணவர்கள் வீட்டில் இருந்தே தலைமைஅமைச்சரின் நிகழ்ச்சியை பார்க்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்று கூறியுள்ளார்.

முன்னாதாக விடுமுறையில் மாணவர்களை பள்ளிக்கு வரும் உத்தரவை திரும்பப் பெறா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எது எப்படியோ, மக்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும் ஆதிக்கவாத அரசாக இந்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்குசேவை வரி என்று மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்த பாஜக அரசு தற்போது தமிழக மாணவர்களை நோக்கி அந்த அடாவடியை திருப்பியிருக்கிறது என்று, ஒரு தமிழக சொலவடையை சொல்லி சலித்துக் கொள்கின்றனர் தமிழகமக்கள். அந்தச் சொலவடை: கிழிந்தது கிருட்டிணகிரி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.