Show all

வந்த படங்கள், வசூலில் பெற்ற இடங்கள்! நடப்பு ஆண்டில்

நடப்பு ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் பத்து படங்களை வசூல் அடிப்படையில் பட்டியல் இட்டுள்ளோம் உங்கள் பட்டியலோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்திட.

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் சூர்யாவின் காப்பான் படம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 
காப்பான் படம்: சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியது. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிசா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய தலைமைஅமைச்சராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்திருந்தார்கள். 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் ஜெயம் ரவியின் கோமாளி 9-வது இடத்தை பிடித்துள்ளது.
கோமாளி படம்: அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. 16 ஆண்டுகள் நினைவற்ற நிலையில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ள கோமாளி திரைப்பட ஆர்வலர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் தனுசின் அசுரன் இந்த 8-வது இடத்தை பிடித்துள்ளது.
வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கிய இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். திரைப்பட ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றபடம் அசுரன் 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து விலகி தனித்து நிற்கும் இந்தப் படத்தை பலரும் பாராட்டியதோடு வசூலையும் வாரிக் குவித்தது. 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை 6வது இடத்தை பிடித்துள்ளது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார். தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் தமிழ் குடும்பத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டி.இமான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதைத்தலைவியாக வித்யாபாலன் நடித்திருந்தார். பிங்க் படத்தின் கதைக்கருவை வைத்துக் கொண்டு தமிழில் சிலமாற்றங்களை செய்து திரைப்பட ஆர்வலர்களைத் தன்வசப்படுத்தினார் இயக்குநர் வினோத்.

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா-3 படம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா-3 படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி வசூல் வேட்டை நடத்தியது. 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் அஜித்தின் விசுவாசம் படம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
அஜித் - சிவா கூட்டணியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் கதைத்தலைவியாக நயன்தாராவும், அவருக்கு மகளாக அனிகாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 
இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் இரஜினிகாந்தின் பேட்ட படம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் பேட்ட. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினிகாந்த், ‘காளி’ என்ற கதாபாத்திரத்திலும் அவருக்கு பகைவனாக விஜய் சேதுபதி ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். 

இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் முதல் இடத்தை பிடித்து நடப்பு ஆண்டின் சாதனை படமாக வென்றது விஜய்யின் பிகில் படம்.
அட்லீ இயக்கத்தில் வெளியான படம் பிகில். விஜய் கதைத்தலைவனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கதைத்தலைவியாக நயன்தாராவும், அவர்களுடன் ஜாக்கி செராப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.