Show all

திரளானோர் பார்வையிட்ட, மாபெரும் சீர்காழி நெல் திருவிழா! இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள்.

ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.
 
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீர்காழியில் நலம் பாரம்பரிய வேளாண் அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது.  

விழாவில் எட்டு மாநிலத்தில் விளையக் கூடிய பாரம்பரிய இயற்கை முறையில் விளைவித்த 475 நெல் வகைகளை வரிசைப்படுத்தி  காட்சிக்கு வைத்திருந்தனர். இயற்கை முறையில் விளைவித்த நெற்கதிர்களைப் பார்வைக்கு வைத்திருந்ததுடன், இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்து கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.  இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சென்றனர். சிறுதானிய உணவு வகைகள் தயாரித்து அனைவருக்கும் வழங்கப்பட்டன. இயற்கை முறையில் உழவு செய்து வரும் உழவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.