Show all

‘எப்போதும் பசுமை’ பணக்காரர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா!

எந்த நிலையிலும் விழாத தொழில்கள், படிப்புகள், துறைகள் ஆகியவற்றை எப்போதும்பசுமை என்ற தலைப்பில் கொண்டாடுவார்கள். அதுமாதிரி ‘எப்போதும் பசுமை’ பணக்காரர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா!

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் 25 பணக்கார குடும்பங்கள் கிட்டதட்ட 140,000,00,00,000 டாலர் செல்வத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும், இது கடந்த ஆண்டை விட 24 விழுக்காடு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ‘எப்போதும் பசுமை’ பணக்காரர்கள் பட்டியலில் அதிக வருமானம் கொண்டவர்களில் முதலிடத்தில் உள்ளவர், வால்மார்ட் நிறுவனத்தின் வால்டன் தான். கடந்த ஆண்டு அறிக்கையின் படி, இவரின் ஒரு நிமிட வருமானம் 70,000 டாலர்களாம்.

இதே உலக அளவில் மிக பிரபலமான கேண்டி மிட்டாய் நிறுவனர், மார்சின் வருமானம், 37 பில்லியன் டாலரிலிருந்து, 127 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

இதுவே மூன்றாவது இடத்தில் உள்ள கோத்ஸ், தொழிலதிபர் மற்றும் அரசியல் வாதியான இவரின் வருமானம், 26 பில்லியன் டாலரிலிருந்து, 125 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அடுத்த இடத்தில் சவுதியை சேர்ந்த குடும்பம் 100 பில்லியன் டாலர் அளவிலும், பிரான்சை சேர்ந்த வெர்டைம்மர் குடும்பம் 57.6 பில்லியன் டாலர்களுடனும், தொழிலதிபர் ஹெர்மஸ் 53.1 பில்லியன் டாலர்களுடனும் உள்ளனராம்.

இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் வருமானம் 7 பில்லியன் டாலரிலிருந்து, 50 பில்லியன் டாலர் வரை என்று கூறப்பட்டுள்ளது. 

இவர்கள்தாம் நாம் பேச வந்த, ‘எப்போதும் பசுமை’ பணகாரர்கள். எதற்கு நமக்கு இந்தப் பேச்சு? எப்படி நாம் இந்த இருபத்தைந்துக்குள் வரமுடியும் என்கின்றீர்களா? உண்மைதான் வரமுடியாது என்று நினைத்தால் வர முடியாதுதான். 

அப்படியானால் வரமுடியும் என்று நினைத்தால் வரமுடியுமா? ஆம்! சாதிப்பதற்காக, அப்படி தொடர்ந்து நினைப்பதைத்தான் மந்திரம் என்கிறது தமிழ்மெய்யியல். தன்னம்பிக்கை என்கிறது நவீன விஞ்ஞானம். கனவு காணுங்கள் என்கிறார் அப்துல்கலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.