Show all

சோதனையைச் சாதனையென்று பீற்றிக் கொள்ளும் மோடி: திருமாவளவன்

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவில் நடைபெறும் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்லும் வழியில் திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவர்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

நடுவண் பாஜக மோடி அரசு காகிதப்பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் 7.7விழுக்காட்டிலிருந்து 5.7 விழுக்காடு குறைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி சரிவு 8விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக சென்ற நிலையில் புள்ளி விவரங்களையும், பல்வேறு பொருளாதார அறிஞர்களின் ஆய்வுக்கருத்துகளையும் மூட்டை கட்டி மறைத்து விட்டு, சோதனைகளையே சாதனை என்று பீற்றிக் கொள்ளும் மோடி, இந்திய மக்களிடம் தவறு என்று ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்க கூட இயலாத நாள் வரும்.

இப்போதே வருத்தம் தெரிவிக்கும் முகமாக பல பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்க மோடி அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,604

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.