Show all

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு! வைகோ கதறி அழுதார். நியூட்ரினோ திட்டஎதிர்ப்பு நடைபயண நிகழ்ச்சியில்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயண நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்கள்; நடுவே மேடையில் உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்தார். நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த தொண்டர் சிவகாசியைச் சேர்ந்த ரவி என தெரியவந்துள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவி தீக்குளித்தார். எரிந்தபடி ஓடி வந்தார் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்தபடி மேடையை நோக்கி ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தீக்குளித்த அந்த தொண்டருக்கு மதுரை அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் நடைபயண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர் தீக்குளித்ததை தொடர்ந்து வைகோ, இயற்கை அன்னையே அவரை காப்பாற்று என மேடையில் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

நமது தாய்நாடு! வெள்ளையனை விரட்டியடித்து மீட்ட நமது இந்தியா என்று பெருமை கொண்டிருந்த காலம் போய் இந்தியா அரசு என்றாலே, தரமறுக்கும் கல்விஉரிமை, காவிரி மேலாண்மை வாரியம், வரலாற்று மீட்பு அகழ்ஆய்வுகள், வேண்டாமென்று சொல்லியும் திணிக்கும் ஸ்டெர்லைட், மீத்தேன்திட்டம், எரிவாயுத்திட்டம், அணுஉலை, நியுட்ரினோ என்று தமிழ் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத கொடுமை ஆட்சியாக இருக்கிறது. இந்த மோடி கொடுங்கோலனின் ஆட்சி! இந்தக் கொடுங்கோலன் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தே தீருவோம் என்று ஒவ்வொரு தமிழனும் சூளுரைப்போம்.                                    

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.