Show all

மெரினாவில் வேட்டியுடன் வரிந்து கட்டிய பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் பேரணி

வேட்டியுடன் வரிந்து கட்டிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 50000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

     தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 50000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டாவது சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது சல்லிக்கட்டு நடத்த நடுவண் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.