Show all

கமல் புதிய இணையத் தளம் தொடங்கியுள்ளார்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் புதிய இணையதளத்தை தொடங்கினார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர். இதையடுத்து கமல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கமல் வரும் அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அவரது மன்ற நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடங்குவதற்கான பிரமாண பத்திரத்தை பதிகை செய்தனர். இந்நிலையில் http://naalainamadhe.maiam.com/ என்ற இணையதளத்தை கமல் தொடங்கினார். தன்னார்வலர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இதில் இணையலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். தன்னார்வலர்கள், கல்வி, கொழில் சுற்றுச்சூழல்,வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.