Show all

அமெரிக்காவில் கமல், தனது அரசியல் கனவுகள் குறித்து மனந்திறப்பு

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என நடிகர் கமல் அமெரிக்க ஹார்வர்டு வணிகப் பள்ளியில் பேசினார்.

நடிகர் கமல் அரசியலில் குதித்துள்ளதாக அறிவித்துள்ளார் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல் ஹார்வர்டு வணிகப் பள்ளி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பேசியதாவது;

இந்த ஆண்டில் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் தேர்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதுவே மாநில அரசின் நிதிச்சுமைக்கு காரணமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது சட்டைப் பையில்;; இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்கமுடியாது.

பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் இவர்கள் மக்களுக்காக போராடினார்கள். தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார் ,காந்தி எனது முன்னோடிகள்.

நான் வித்தியாசமானவர் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு கமல் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.