Show all

இதழியலாளர் மேத்யூ அதிரடி!

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல் குற்றவாளி என்று தெரிவித்துள்ள இதழியலாளர் மேத்யூ இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் என்னை அணுகினால் நான் அவர்களுக்கு உரிய பதில் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக 5 கொலைகளில் நேரடியாக தொடர்புடைய பழனிசாமி தமிழகத்தில் முதல்வராக இருப்பதாக இதழியலாளர் மேத்யூ குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு மாளிகையில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக இதழியலாளர் மேத்யூ சாமுவேல் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இதழியலாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தும் எண்ணத்திலும், அவரை கைது செய்யும் வகையிலும் தமிழக தனிப்படை காவல் துறையினர் டெல்லி மற்றும் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் இதழியலாளர் மேத்யூ இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை கைது செய்ய காவல் துறையினர் டெல்லி வந்துள்ளதாக சக இதழியலாளர்கள் தெரிவித்துள்ளனர் சோதனை, கைது, விசாரணை என அனைத்திற்கும் நான் தயாராக உள்ளேன். பழனிசாமி தான் கொலையாளி. பழனிசாமி தான் 5 பேரையும் கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக காவல் துறையினர் தற்போது வரை என்னை தொடர்புகொள்ளவில்லை. என்னை தொடர்பு கொண்டால் நான் அவர்களது கேள்விக்கு உரிய பதில் அளிக்க தயாராக உள்ளேன். எனது நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். 

இந்தியாவில் முதல் முறையாக 5 கொலைகளில் நேரடியாக தொடர்புடைய முதல்வர் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். இந்த பொங்கலுக்கு அவர் வெளியில் உள்ளார். அடுத்த பொங்கலுக்கு நான் அவரை சிறைச்சாலையில் சந்திப்பேன். என் பின்னால் பா.ஜ.க. இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் எந்தவித கலப்படமும் இல்லாத இதழியலாளர் என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக எல்லா ஊடகங்களும் அடக்கியே வாசிக்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வரை ஒரு இதழியலாளர் குற்றச்சாட்டை நம்பி எப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முன்னெடுத்து விட முடியும். ஆளுங்கட்சியின் மீதான முற்றுகை நடவடிக்கையாக பாஜக நடுவண் அரசு கூட இதன் பின்னணியல் இருக்கவும் வாய்;ப்பு இருக்கிறது என்றவகையாகவெல்லாம் யோசிக்கப் படுகிறது. காலந்தான் பதில் சொல்லும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.