Show all

சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை

 

 

சேலம், கிச்சிப்பாளையம் புனரமைப்பு காலனியில், ஜெயலலிதா தீபா பேரவையை, அ.தி.மு.க.,வினர் தொடங்கினர்.

     ஜெயலலிதா மறைவை அடுத்து, அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவுக்கு, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., தொண்டர்கள் மையத்தில் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில், சேலம், கிச்சிப்பாளையம் புனரமைப்பு காலனியை சேர்ந்த பொதுமக்கள், தீபாவுக்கு ஆதரவாக சுவரெட்டி ஒட்டி உள்ளதோடு, ஜெயலலிதா தீபா பேரவையை துவக்கி உள்ளனர்.

     இது குறித்து, ஜெயலலிதா தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ராமு கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தன் அரசியல் வாரிசு என, தொண்டர்களுக்கு தெளிவுபடுத்தாத போது, சசிகலாவை நாங்கள் ஏற்க மாட்டோம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவை ஒத்து இருப்பதோடு, பேச்சு, நடைமுறை என அனைத்தும் ஜெயலலிதா போல் உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வை வழி நடத்தும் அனைத்து திறமைகளும் அவருக்கு இருப்பதாக கருதுகிறோம். எனவே, தீபாவை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.