Show all

சல்லிக்கட்டுக்கு ஆதரவு: சென்னையை குலுங்க வைத்த தமிழர்கள் பேரணி

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடுவண் அரசு அனுமதி அளிக்க கோரி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற,

     தமிழக வரலாற்றில் தலையாய இடம் பெறத்தக்க மாபெரும் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.

     தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் பெருவிழாவை யொட்டி பாரம்பரிய சிறப்புமிக்க வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடுவண் அரசு அனுமதி அளிக்க கோரி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.

     இந்தப் பேரணியில் பங்கேற்ற பலர் தங்களது காளை மாடுகளை அலங்கரித்து உடன் அழைத்து வந்திருந்தனர். சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் விதமாக இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்றிருந்தது, குறிப்பிடத்தக்கது.

     பொங்கல் பெருவிழாவிற்கு இன்னும் ஒரு கிழமையே உள்ள நிலையில் சென்னை நகரை குலுக்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேரணி முகநூல், கீச்சகம், புலனம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் wedojallikattu  என்ற தலைப்பின்கீழ் வைரலாக பரவி வருகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.