Show all

இன்று நள்ளிரவு சென்னைக்கு மழை இல்லையாம், நார்வே வானிலை மையம் தகவல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி கழிமுகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறது.

சென்னையில் குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்றிரவு கனமழை கொட்டியதில் சென்னையின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கனமழை கொட்டும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே சென்னை மாநகர் முழுவதும் லேசானமழை பெய்யும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்றும் எச்சரித்த நார்வே நார்வே நாட்டு வானிலை மையத்தின் கணிப்பு இந்த ஆண்டும் மிகச்சரியாகவே இருந்து வருகிறது.

நேற்று மாலைக்குப் பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதுபோலவே நேற்று மாலை முதலே சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.

இந்நிலையில் இன்றும் பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இரவில் இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.