Show all

சாத்தியப்படுமா! அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் தடைபட்டுள்ளன. எனவே தனியார் பள்ளிகள், இயங்கலை வழியில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மாணவர்களிடம் கட்டணம் பெறுவது கட்டாயம் என்பதால், இயங்கலை வகுப்புகளை எடுப்பதற்கு தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இயங்கலை வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த ஆண்டு முழுக்க பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை புரிந்து கொண்டு கல்வி நிறுவனங்களும், நடுவண் அரசும், இயங்கலைக் கல்விக்கு முதன்மைத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

தனியார் பள்ளிகள் இயங்கலை வகுப்புகளைத் தொடங்கி செயல்படுத்தி வருவதற்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இயங்கலை வகுப்புகள் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில் வரும் திங்கட் கிழமை முதல் இயங்கலை வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார். 

ஏற்கனவே பல்வேறு கல்வி சார்ந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பிறகு திரும்பப் பெறப்பட்டன. தமிழக அரசிலேயே அண்மையில் அதிக முடிவுகளை திரும்பப் பெற்றது கல்வித்துறைதான். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்புகள் எடுக்கும் முடிவில் அரசு உறுதியாக இருக்குமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அதிகப்படியாக ஏழை மாணவர்கள், அடித்தட்டு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் இல்லாத பெற்றோர்களின் குழந்தைகள்தான் இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள். அவர்களை இயங்கலை வகுப்புகள் எப்படி சென்று சேரும் என்பது மிகப்பெரிய அறைகூவல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.