Show all

இந்திய நாட்டின் 68வது குடியரசு நாள்விழா

 

     நாட்டின் 68வது குடியரசு நாள்விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கோட்டையில் முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

     அதனைத்தொடர்ந்து, மெரீனா கடற்கரையில் நடந்துவரும் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் குடியரசு நாள் கலைநிகழ்ச்சிகளை அவர் கண்டுகளித்தார்.

     இந்நிலையில், ஆண்டுதோறும் குடியரசு நாள் விழாவுக்கு சென்னை மெரீனாவில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி விழாவை கண்டுகளிப்பர்.

     ஆனால், சல்லிக்கட்டுக்காக மாணவர்கள் தங்களின் அறப்போராட்டத்தை நடத்தி உலகையே வியந்து பார்க்கவைத்த நிலையில், தமிழக காவல்துறையை ஏவி வன்முறையில் ஈடுபட்டதாலே என்னவோ பொதுமக்கள் கூட வில்லை.

     இதனால், காந்தி சிலை அருகே இன்று நடைபெற்ற குடியரசு நாள்விழாவில் கூட்டமில்லாமல் சென்னை மெரீனாவே வெறிச்சோடி காணப்பட்டது.

     1947ஆகஸ்ட்15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்த இந்த நாளை விடுதலைநாள்; என்கிறோம்.

     28ஆம் நாள் ஆகஸ்டு மாதம் 1947ம் ஆண்டு இந்தியாவிற்கான ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.

     அந்தக் குழு அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் நடைமுறையில் இருந்த சட்ட நிருவாகங்களை அடிப்படையாகக் கொண்;ட வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்க அவையில் சமர்ப்பித்தது.

     பின்னர் 2ஆண்டுகள், 11மாதங்கள், 166நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

     அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

1950 முதல் இது குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.