Show all

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

500,1000 ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பின் தாக்கமாக ஐம்பது ரூபாய்தாள் செல்லாது; இரண்டாயிரம் ரூபாய் தாள் இன்னும் கொஞ்ச நாட்களில்; செல்லாது என்ற அறிவிப்பு வரும். என்ற பொது மக்கள் கணிப்புகள் எல்லாம் அவ்வப்போது வதந்திகளாக உருப்பெற்று வரப்போகின்றன. அந்த வயைhக உருப்பெற்றதுதாம் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்தி.

     அங்கே இங்கே, அந்தப் பையில் இந்தப் பையில், என்று நினைவு மறதியாக கொஞ்சம் தொகை ஒவ்வொரு இல்லத்திலும் கையிருப்பாக, சேமிப்பாக இருக்கும்; அந்தத் தொகை அவசரத் தேவைகளுக்குப் பேருதவியாகப் பயன் பட்டிருந்திருக்கும்.

     அந்த வாய்ப்புகளுக்கு மோடியின் 500,1000 ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பு நிரந்தர ஆப்பு அடித்து விட்டது. அது மக்களை எந்தக் காசு, எப்போது செல்லாது என்ற அறிவிப்பு வருமோ என்ற நிரந்தர பீதிக்கு உட்படுத்தி விட்டது.

உறுதித் தன்மைக்கான உத்தமத் தலைவன் மோடி வாழ்க!

     10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

     நடுவண் அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் தாள்களை விட நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது.

     இதைத்தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் புதிய குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூயாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத்தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

     எனவே பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். இவை சட்டப்படி செல்லுபடியாகும் என மீண்டும் உறுதியளிக்கிறோம்.

     மேற்கண்ட தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.