Show all

ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்! வானிலை மையம் அறிவிப்பு

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது புயலாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதியில் சனிக்கிழமை முதல் திங்கட் கிழமை வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீனவர்கள் வெள்ளிக் கிழமைக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லட்ச தீவுப்பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி உள்ளது. இந்த இரு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். வானிலை மையம் அறிவிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.