Show all

இன்று தொடங்கும் இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள இந்திய அணி, பத்தாவது தொடரையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002ஆம் ஆண்டு ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டானில் நடைபெற்ற போட்டியில் தான் வெற்றி பெற்றது. எனவே, மீண்டும் ஒரு போட்டியாவது வெற்றி பெற வேண்டும் என வெஸ்ட்இண்டீஸ் அணி போராடுவது உறுதி. அதேபோல், இந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். என இந்திய அணியும் வெற்றி பெற மிகவும் போராடும். 

இந்திய அணியில் 18 வயதான பிரித்வி ஷா முதன் முறையாக களமிறங்கவுள்ளார். அவர் இந்தியாவின் 293 டெஸ்ட் வீரராக அடியெடுத்து வைக்கிறார்.     இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரித்வி ஷா தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.