Show all

தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை!

வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென தனித்துவமான அடையாள அட்டை வழங்க திட்டமிடப்படடு;ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் அடையாளம் எனும் பெயர் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 12 எண்மான தனி அடையாள அட்டை அளிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் அடையாள எண் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் ஆதார் எண் உள்ள நிலையில், மாநில அரசினால் தனி அடையாள எண் அளிக்கப்படவுள்ளது என்பதும், வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,475.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.