Show all

இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை

கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள திருவான்மியூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்திற்குச் சொந்தமான நிலப் பரப்பாகிய கச்சத்தீவை இலங்கைக்கு, திமுக துணையோடு இந்திய அரசு தாரை வார்த்த காலத்தில் இருந்து, கடந்த பல ஆண்டுகளாக தமிழக தென் கடலோர மீனவர்கள் சொல்லொண்ணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இலங்கையில்ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தொழில் செய்ய இயலாத நிலை இன்றளவும் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களதுபடகுகளும், மீன்பிடி உபகரணங்களும்இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை

பறித்துச் செல்லப்படுவதும், தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்தத் துயர நிலை மாறி ஏழை, எளிய தமிழக மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்வை நிம்மதியாக நடத்திட நடுவண் அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அளவில் உயர் நிலை பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்தப் பொதுக்குழு நடுவண் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.