Show all

பருப்பு விலையை கட்டுப்படுத்த தமிழக அரசின் நடவடிக்கைகள் கண்துடைப்பு – கருணாநிதி

பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை நோக்கி வேகமாக உயர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக திரு கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

பருப்பு விலையை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்றும், இது தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தமிழக முதல்வரின் கோடநாடு பயணம் ஏற்புடையதல்ல என்றும் திமுக தலைவர் திரு.கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.